The Jumma Prayer is Must for Muslim | ஜும்மா நம்மீது கடமை

ஜும்ஆ என்பது நம் மீது கடமையாக்கப்பட்ட வணக்கமாக உள்ளது..


நம் மக்களில் சிலர் ஜும்ஆ தொழுகைக்காக அழைக்கப்பட்ட பின்பும் தங்கள் அலட்சியத்தால் பொடுபோக்காக இருக்கின்றனர்!
அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வோம்!!!
அல்லாஹ்வின் கட்டளையை நிராகரித்ததால்தான் ஒரு சமுதாயமே குரங்காக மாற்றப்பட்ட வரலாறு நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்!!!

சனிக்கிழமை வரம்புமீறியோரை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறும்போது ஒரு கூட்டம் அல்லாஹ் கூறியபடி நடந்தனர்! இன்னொரு கூட்டம் அல்லாஹ்வின் கட்டளைக்கெதிராக மீனை வேட்டையாடினர்! இன்னொரு கூட்டம் அவர்கள் செய்வது தவறு என தெரிந்தும் அலட்சியமாக நடந்தனர்!!!

அல்லாஹ் நன்மையை ஏவி தீமையை தடுக்க முயன்ற கூட்டத்தை மட்டும் விட்டு மற்ற இரு கூட்டத்தையும் இழிந்த_குரங்குகளாக மாற்றினான்.. இதை அல்குர்ஆனின் 7:163.. வசனங்களில் காணலாம்..

பள்ளிக்கு தொழுகைக்காக அழைக்கப்பட்டதும் வெட்டிப்பேச்சுகள், வீண்அ ரட்டைகள், வியாபார விவகாரங்கள்.. போன்ற ஷைத்தானிய வழிகேட்டிலிருந்து விலகிக்கொள்வோம்.. படைத்தவனின் கட்டளைக்கிணங்க முஸ்லிம்களாக செயல்படுவோம்... அல்லாஹ்வின் கோபப்பார்வைக்கு ஆளாகுவதைவிட்டும் விலகிக்கொள்வோம்..

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.
(திருக்குர்ஆன் 62:9)


فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
(திருக்குர்ஆன் 62:10)




நன்றி:
https://plus.google.com/116999813840858067600/posts/44UTcRJ8Cav

Post a Comment

0 Comments