The Jumma



ஜுமுஆ தினம்


இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம் “வாய் மூடு” என்று கூறினால், நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புஹாரி 934
 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதயமாகும் நாட்களில் மிகச் சிறந்தது ஜுமுஆ நாளாகும்
நூல்: முஸ்லிம்

ஜுமுஆ நாள் அன்றுதான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள், அன்றுதான் அவர்கள் சுவர்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்
நூல்: முஸ்லிம்


ஜும்மா நாளில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தும் போது ஒரு மனிதர் வந்தார் உடனே நபி (ஸல்) அவர்கள், நீர் தொழுது விட்டீரா? என கேட்டார்கள். அதற்கவர் “இல்லை” என்றார்கள். எழுந்து தொழுவீராக என்று கூறினார்கள்.
நூல்: புஹாரி 930


நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் மிம்பரில் மக்களுக்கு சொற்பொழிவு நிகழ்த்தும் போது “காஃப்” (Kaaf) அத்தியாயத்தை ஓதுவார்கள். அவர்கள் வாயிலிருந்து அதை நான் மனனம் செய்தேன்.
நூல்: முஸ்லிம்


சூரியன் உச்சியிலிருந்து சாயும் நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுபவர்களாக இருந்தார்கள்
நூல்: புஹாரி 904



வெள்ளிக்கிழமை தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள். வியாபாரத்தை விட்டு விடுங்கள். நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது
அல்-குரான் 62:9


ஜுமுஆ நாள் வந்துவிட்டால் வானவர்கள் பள்ளியின் நுழைவாயிலில் நின்று கொண்டு முதலில் வருபவரையும் அதை தொடர்ந்து வருபவர்களையும் வரிசைப்படி பதிவு செய்கிறார்கள்
நூல்: புஹாரி 929


உங்களில் ஒருவர் ஜும்மா தொழுதால் அதன் பின்னர் நான்கு ரக்அத்கள் தொழட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நூல்: முஸ்லிம்


உங்களில் ஒருவர் ஜுமுஆ தொழுகைக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நூல்: புஹாரி 894


நபி(ஸல்) அவர்கள் ஜுமுஆவிற்கு பிறகு (வீட்டிற்கு)ப் புறப்பட்டு சென்று இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள்
நூல்: புஹாரி 937


அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரை தவிர அனைத்து முஸ்லிம்கள் மீது ஜுமுஆத் தொழுகை கடமை என ந்பி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
நூல்: அபு தாவூத்






நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் வெள்ளியன்று ஒரு நேரம் உண்டு சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அல்லாவிடம் ஏதேனும் நன்மையை கோரினால், அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை. அது குறைவான நேரமாகும்
அறிவிப்பவர் : அபு ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்


வெள்ளிக்கிழமை அன்று (முதலில்) நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்துவார்கள். பின்பு உட்கார்ந்து விட்டு மீண்டும் எழுந்து நிற்பார்கள்
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1563



(ஜுமுஆவில்) 'தொழுகையை நீட்டி உரையைச் சுருக்குவது ஒருவரின் மார்க்க அறிவிற்கு அடையாளம் ஆகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அம்மார் இப்னு யாசிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1577



நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது வந்தேன். அவர்களது தொழுகையும், உரையும் (நீண்டதாகவும் இல்லாமல் சுருக்கமாகவும் இல்லாமல்) நடுத்தரமாகவே அமைந்திருந்தன
அறிவிப்பவர்:ஜாபிர் பின் சமுரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1671

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘ ஏழு நாட்களுக்கு ஒரு முறை (வெள்ளிக்கிழமை அன்று) தம் தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமையாகும்
அறிவிப்பவர்: அபு ஹுரைரா(ரலி)
நூல்:முஸ்லிம் 1539



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் படிகள் மீது நின்ற படி “மக்கள் ஜுமுஆக்களை கைவிடுவதிலிருந்து விலகியிருக்கட்டும், அல்லது அவர்கள் இதயங்கள் மீது அல்லாஹ் முத்திரை பதித்து விடுவான், பிறகு அவர்கள் அல்ட்சியவாதிகளில் சேர்ந்து விடுவர்” என கூறினார்கள்
அறிவிப்பவர்:அப்துல்லாஹ் (ரலி)
நூல்:முஸ்லிம் 1570


இந்த வெள்ளிக்கிழமை நாளை அல்லாஹ் நமக்காக தேர்ந்தெடுத்து அறிவித்தான் (வார வழிபாட்டு நாள் தொடர்பாக)) மக்கள் நம்மை பின் தொடர்பவர்களாகவே உள்ளனர்
அறிவிப்பவர்: அபு ஹுரைரா (ரலி)
நூல்:முஸ்லிம் 1549



வெள்ளிக்கிழமை அன்று (முதலில்) நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரை நிகழ்த்துவார்கள். பின்பு உட்கார்ந்து விட்டு மீண்டும் எழுந்து நிற்பார்கள்
அறிவிப்பவர்:இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1563
 · 


இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் 32ஆவது அத்தியாயத்தையும் 76ஆவது அத்தியாயத்தையும் ஓதுவார்கள்
நூல்:முஸ்லிம் 1593


நபி(ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுகையுல் “அல்-ஜுமுஆ” எனும் 62ஆவது அத்தியாயத்தையும் “அல்-முனாஃபிகூன்” எனும் 63ஆவது அத்தியாயத்தையும் ஓதுவார்கள்
நூல்: முஸ்லிம் 1594



அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது, நபி(ஸல்) அவர்கள்
உச்சி சூரியன் சாயும் போது ஜுமுஆத் தொழுகை தொழவிப்பார்கள்
அறிவிப்பவர்:அனஸ்(ரலி)
நூல்:புஹாரி 904



அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது, நாங்கள் ஜுமுஆத் தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவோம். ஜுமுஆத் தொழுகைக்கு பிறகுதான் மதிய உணவு மேற்கொள்வோம்.
நூல்: புஹாரி 905



அலட்சியமாக மூன்று ஜுமுஆக்களை யார் விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
நூ: முஸ்லிம்

Post a Comment

0 Comments