Fasting

Prophet (SAW) PrayersMercy of Allah(SWT)  |   Jumma Day Bayans and Hadiths(New)

நோன்பின் சட்டங்கள்

  • வயது வந்த ஆண், பெண் அனைவரின் மீதும் நோன்பு நோற்பது கட்டாய கடமையாகும்.
  • சுபுஹூ சாதிக் அதிகாலையிலிருந்து சூரியன் மறையும் வரை சாப்பிடுவது, குடிப்பது, உடலிறவு கொள்வது ஆகியவைகளை விட்டும் விலகி இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு நோன்பிற்கும் நிய்யத் செய்வது நிபந்தனையாகும். அதாவது முழுமனதுடன் நோன்பு வைக்கிறேன் என்ற நாட்டம் இருக்க வேண்டும்


நோன்பு விஷயத்தில் சலுகை அளிக்கப்பட்டவர்கள்

  • நோயாளி, பயணி, மாதவிலக்கு பெண்கள், நோன்பு நோற்றால் தனக்கோ தன் குழந்தையின் உயிருக்கோ பாதிப்பு ஏற்பட்டுவிடும் என அஞ்சுகின்ற கற்பமுற்ற பெண்கள், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இவர்கள் ஒவ்வொருவரும் விடுபட்ட நோன்புகளை ரமலான் அல்லாத மற்ற நாட்களில் கட்டாயமாக நிறைவேற்றி ஆகவேண்டும்.
  • நோன்பு நோற்றால் பசி, தாகம் காரணமாக உயிர் இழக்க நேரிடும் என்ற நிலையில் உள்ள நோயாளிகள், நோன்பு நோற்க முடியாத பலவீனமான முதியவர்கள். இயலாதவர்கள் மட்டும் ஒரு நோன்பிற்கு பகரமாக ஒரு ஏழைக்கு வயிறார ஒரு நாள் உண்வளிக்க வேண்டும்.


நோன்பின் சுன்னத்துகள்

  • அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுதல்.
  • ஸஹர் உணவை அதன் நேரத்திற்குள் தாமதமாக சாப்பிடுதல்.
  • சூரியன் மறைந்த உடன் தாமதமின்றி சீக்கிரமாக இஃப்தார் செய்தல். (நோன்பு திறப்பது)


நோன்பை முறித்துவிடும் செயல்கள்

  • வேண்டுமென்றே சாப்பிடுதல், குடித்தல், உடலுறவு கொள்ளுதல்.
  • வேண்டுமென்றே வாய்நிறம்ப வாந்தி எடுத்தல்
  • மூக்குபொடி, பீடி, சிகரெட் புகையிலை ஆகியவற்றை உபயோகித்தல்
  • காதிலோ, மூக்கிலோ எண்ணெய் அல்லது மருந்து போடுதல்
  • இனிமா செலுத்திக் கொள்ளுதல்


இவைகளால் நோன்பு முறியாது ஆனால் மக்ரூஹ் ஆகும்

  • எந்த தேவையுமின்றி சுவையானவற்றை சுவைத்தல்
  • ஏதாவது ஒரு பொருளை தேவையில்லாமல் மென்று துப்புவது
  • எச்சிலை வாயில் ஒன்று சேர்த்து விழுங்குதல்.
  • மனைவியை இச்சையுடன் பார்த்தல், முத்தமிடுதல், தொடுதல்.
  • நோன்பிற்கு பலவீனத்தை ஏற்படுத்தும் செயலை செய்தல்.
  • திட்டுதல், பொய் மற்றும் புறம் பேசுதல்.


இவைகளால் நோன்பு முறியாது மக்ரூஹும் ஆகாது

  • மிஸ்வாக் செய்தல் செய்யும் போது பல்லிலிருந்து இரத்தம் வடிதல்.
  • கண்ணுக்கு சுர்மா, மருந்து, ஆகியவற்றை உபயோகித்தல்
  • சுயநாட்டமின்றி தொண்டையில், ஈ, கொசு, புகை மற்றும் தூசி சென்றுவிடுதல்
  • தானாகவே வாந்தி எடுத்தல் அது அதிகமாகவோ, குறைவாகவோ, இருப்பினும் சரியே.
  • வாந்தி வந்து தானாகவே உள்ளெ சென்றுவிடுதல்.
  • மணமான வஸ்துக்களையோ வாசனை பூக்களையோ நுகர்தல்
  • தலையிலோ, உடலிலோ எண்ணெய் தேய்த்து குளித்தல்.
  • நோன்பு வைத்திருந்து குளிக்காமலே இருத்தல்.
  • ஊசி (இ ன் ஜ க் ஷ ன்) செலுத்திக் கொள்ளுதல்
  • தானாகவே ஸ்கலிதம் ஆகிவிடுதல் (விந்து வெளியேறி விடுதல்).

Post a Comment

0 Comments