விடைபெறும்
ஹஜ்ஜின் போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை நலம் விசாரிக்க வரும்
வழக்கமுடையவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.
அப்போது நான் அவர்களிடம் (அல்லாஹ்வின்
தூதரே!) எனக்கு கடுமையான நோய் ஏற்பட்டுவிட்டது நான் தனவந்தன்; ஒரு மகளை தவிர வேறு
யாரும் எனக்கு, வாரிசுகாரர்கள் இல்லை. எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு
பாகம் நான் தர்மம் செய்துவிடட்டுமா? என கேட்டேன் அதற்கு நபி(ஸல்) அவர்கள்
“வேண்டாம்” என்றார்கள்.
பின்னர் நான் “பாதியை(க்
கொடுக்கட்டுமா?” எனக் கேட்டேன் அதற்கும் நபி (ஸல்) அவர்கள் “வேண்டாம்” மூன்றில்
ஒரு பாகம் வேண்டுமானால் தர்மம் செய்வீராக! அதுவும் அதிகம் தான்; ஏனெனில், உம்முடைய
வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச்செல்வதைவிட தன்னிறைவுடையவர்களாக
விட்டுச் செல்வதே சிறந்தது. அல்லாஹ்வின் அன்பை வேண்டி நீர் செய்கின்ற எந்த ஒரு
செலவானாலும் சரி. அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படாமல் இருப்பதில்லை; நீர்
உம்முடைய மனைவியின் வாயில் இடுகின்ற உணவுக் கவளத்திற்கும்கூட (உமக்கு நன்மையுண்டு)”
என்று கூறினார்கள்.
நான் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே!
(என் தோழர்களெல்லாரும் மதினாவுக்குச் சென்றுவிடுவார்கள்) நான் மட்டும் இங்கு
(மக்காவில்) பிந்தங்கியவனாக ஆகிவிடுவேனே!” எனக் கேட்டேன்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், “நீர் இங்கு
இருந்தபோதிலும் நல்லறங்கள் செய்துகொண்டே இருந்தால், உமது தகுதியும் மேன்மையும்
அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும்” எனக் கூறிவிட்டு, “உம்மை வைத்து சில
கூட்டத்தார் நன்மை அடைவதற்காகவும் வேறுசிலர் துன்பம் அடைவதற்காகவும் நீர் இங்கேயே
தங்க வைக்கப்படலாம்” என்று கூறினார்கள்.
புஹாரி 1295
Eid Mubarak


0 Comments