தொழுகை மற்றும் பொறுமையின் மூலம் அல்லாஹ்வின் உதவி!


“அவர்கள், தமக்குத் துன்பம் ஏதேனும் நேர்ந்தால், நாங்கள் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்று கூறுவார்கள். அத்தகையோருக்கே அவர்களுடைய இறைவனின் மன்னிப்பும் கருணையும் உண்டு. அவர்களே நல்வழி பெற்றவர்கள் ஆவர்” (2:156,157) என்று இறைவன் கூறுகின்றான்.
          இது குறித்து உமர் (ரலி) அவர்கள். “(ஒட்டகத்தின்) இரு (புறங்களில்) சமமாகத் தொங்கவிடப்பட்ட)  சுமைகளும், (அதன்) நடுப் பகுதி(யிலுள்ள கூடுதலான) சுமையும் எவ்வளவு அழகாக அமைந்துள்ளன!” என்று குறிப்பிட்டார்கள். (அதாவது பொறுமைக்குப் பரிசாகத் தரப்படும் மன்னிப்பும் கருணையும் இரு சமமான சுமைகள் என்றால், அவற்றுக்கிடையே கூடுதல் சுமையாக இருப்பது நல்வழி ஆகும்.)

          மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
நீங்கள் பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் (இறைவனிடம்) உதவி கோருங்கள். உண்மையில் இது, (இறைக்குப்) பணிந்து நடப்போரைத் தவிர (மற்றவர்களுக்குப்) பெரும் பாரமாகவே இருக்கும். (2:45)

புஹாரி 1301

Post a Comment

0 Comments