தந்தைக்காக "ஹஜ்" செய்வது




·        அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

          (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸ், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிக்குப் பின்னால் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது ‘கஸ்அம்’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் வந்தார் உடனே ஃபள்ல் அப்பெண்ணை பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதனை கவனித்த நபி (ஸல்) அவர்கள்) ஃபள்லின் முகத்தை வேறு திசையில் திருப்பிவிடலானார்கள்.

          பிறகு அப்பெண் நபி(ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார்களின் மீது விதியாக்கியுள்ள ஹஜ் கடமை, வயது முதிந்தவரான என் தந்தைக்கு ஏற்பட்டுள்ளது. அவரால் வாகனத்தில் அமர இயலாது. எனவே, நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா?” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “ஆம்!” என்றார்கள். இது விடைபெறும் ஹஜ்ஜின்போது நடந்தது.

Post a Comment

0 Comments