ருக்யா செய்வது எப்படி? எப்போது செய்யலாம்?

ருக்யா: 

Ruqya in tamil

உங்கள் உள்ளத்தில் ஏதேனும் ஒரு வித்தியாசமான நினைப்புகள் இருந்தால் . அதை விட்டு நீங்கள் முழுவதுமாக விலக நாடினால். நீங்கள் ருக்யா செய்யலாம். 

அதேநேரத்தில் நீங்கள் அடிக்கடி அல்லாஹ்விடம் துவா கேட்கவேண்டும். 

ஷைத்தானின் ஊசலாட்டங்களிலில் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று

அதற்காக நீங்கள் பின்வரும் துவாவை கேட்கலாம்:

பிஸ்மில்லாஹ், பிஸ்மில்லாஹ், பிஸ்மில்லாஹ்..

அவூது பில்லாஹி வ குத்ரதிஹி, மின் ஷர்ரி மா அஜிது வ வுஹாதிர்

________________________

அவுது பி கலிமாதில்லாஹி தாம்மா, 

மின் குல்லி ஷைத்தானின் ஹாம்மா,

வ மின் குல்லி "ஐ"ல் லாம்மா.

"ஐ" என்ற எழுத்தை அதே போன்றே படிக்கவும் (Iyn or AYN) 
இன்னும் பல துவாக்கள் உள்ளன. (Link)


ருக்யா செய்யும் முறை

தன்னீரில் ருக்யா செய்ய வேண்டும் பிறகு ருக்யா செய்த தண்னீரில் மட்டுமே இருந்து பருக வேண்டும்.

முதலில் 4 அல்லது 5 தண்ணீர் பாட்டில் களில் தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள்.
அதன் மூடிகளை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு சூரா பாத்திஹா -  3 முறை ஓதி ஊதுங்கள் (அனைத்து பாட்டில்களிலும்)
பிறகு ஆயத்துல் குர்சியை - 3 முறை ஓதி ஊதுங்கள்
பிறகு சூரா பகராவின் கடைசி 2 வசனகளை - 3 முறை ஓதி பாட்டிலில் ஊதுங்கள்
பிறகு சூரா இஹ்லாஸ் -3 முறை
பிறகு சூரா நாஸ் -  3 முறை 
பிறகு சூரா ஃபலக் - 3  முறை ஓதி ஊதுங்கள்

உங்களுடைய தன்னீர் தாகத்தின் தேவையை அந்த ருக்யா செய்யப்பட்ட தன்னீரை கொண்டே பூர்த்தி செய்யுங்கள்.

நீங்கள் இதனை குறைந்த பட்சம் 7 நாட்களாவது செய்யவேண்டும்.
இன்ஷா அல்லாஹ் , அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உங்கள் செயல்பாடுகளிலும் , குணத்திலும் நல்ல மாற்றத்தினை பார்க்கலாம். 

இதை செய்வதற்கு முன்னால் துவா நிச்சயமாக அவசியம்.

Post a Comment

0 Comments