பிறந்த குழந்தைக்கு செய்யவேண்டிய 5 சுன்னத்துகள்

  • வலது காதில் பாங்கும் , இடது காதில் இகாமத்தும் ஓத வேண்டும் (இதற்கான ஆதாரங்கள் பலஹீனமான ஹதீஸாக இருந்தாலும் இதை செய்ய கூடாது என்ற எந்த ரிவாயத்தும் வரவில்லை , அதே போல் பல ரிவாயத்துகளில் வந்துள்ளது)
  • "தஹ்னீக்"  செய்ய வேண்டும் (அதாவது உங்களின் வீட்டில் இருக்கும் தக்வா உள்ள அதிக இபாதத்தில் ஈடுபடும் ஒரு நல்ல இறையடியாரை கொண்டு, அவரின் வாயில் பேரீத்தம் பழத்தினை நன்றாக மென்று. ஒரு சிறு பகுதியை குழந்தையில் மேல் உதட்டில் தடவ வேண்டும். இது நபி (ஸல்) அவர்களின் சுன்னாவாகும்)
  • ஏழாவது நாள் அக்கீகா கொடுக்க வேண்டும் ஆண் குழந்தைக்கு 2 ஆடு அல்லது பெண் குழந்தையாக இருந்தால் 1 ஆடு என்று அக்கீக்க கொடுக்க வேண்டும். (வசதி படைத்தவருக்கு மட்டும் , வசதி இல்லாமல் கடன் வாங்கி செய்ய கூடாது. இந்த கறியை நீங்களும் எடுத்துக்கொள்ளலாம் . பகிர்ந்தும் கொடுக்கலாம்.)
  • அதே ஏழாம் நாம் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும். ( குரானில் உள்ள நல்ல பெயர்கள் , அல்லது சஹாபாக்களின் பெயர்கள் போன்று நல்ல பெயர் வைக்க வேண்டும். )
  • கடைசியாக  அந்த குழந்தைக்கு மொட்டை அடிக்க வேண்டும் . அந்த முடிக்கு எடையின் அளவிலான வெள்ளியை நீங்கள் சதகா செய்ய வேண்டும்.

Post a Comment

0 Comments