ஒவ்வொரு மனிதனையும் தினசரி 3 துன்பங்கள் பாதிக்கின்றன
ஒவ்வொரு பகலிலும் மற்றும் ஒவ்வொரு இரவிலும் ஆதமின் மக்கள் இந்த 3 துன்பங்களால் பாதிக்கப்படுகின்றன. இந்த 3 துன்பங்களின் பாதிப்பு இல்லாமல் ஒரு நாள் கூட கடந்து செல்வதில்லை.
முதல் துன்பம்
மனிதனின் ஆயுட்காலம் தினசரி குறைக்கிறது. அவனது ஆயுட்காலம் குறைவதை பற்றி அவன் அவ்வளவாக கவலைப்படுவதில்லை மாறாக, அவனது செல்வம் குறைந்தால் அதனை பற்றியே கவலைப்பட ஆரம்பிக்கிறான். இழந்த செல்வத்தை மீட்டெடுக்க முடியும் ஆனால் அவனது ஆயுட்காலத்தை திரும்ப பெற முடியாது என்பதை அவன் மறந்து விடுகின்றான்.
இரண்டாவது துன்பம்
தினமும் அல்லாஹ் அவனுக்கு வழங்குகின்ற பொருட்களை அவன் உட்கொள்கிறான். அது ஹலாலாக இருந்தால், அதை குறித்து அவன் விசாரிக்கப்படுவான் [ஸூரத்துத் தகாஸுர் (102:8)] ஆனால், அதுவே ஹராமான வழியில் அவன் பெற்றிருந்தால் பின்னர் அதற்காக அவன் தண்டிக்கப்படுவான்; தண்டனையின் அளவை அல்லாஹ்வை தவிர எவறும் அறியமாட்டார்.
மூன்றாவது துன்பம்
ஒவ்வொரு நாளும் மனிதன் மறுமையை சில தூரம் நெருங்குகிறான்; அதே நேரத்தில் இந்த உலகை விட்டும் சில தூரம் விலகி செல்கின்றான். ஆனால் நொடிப்பொழுதில் செல்லக்கூடிய இந்த உலக வாழ்கைக்கு அவன் செலுத்துகின்ற அக்கறைக்கு முன்னால் என்றென்றும் நிலைத்திருக்கும் மறுமை வாழ்விற்கு அவன் செலுத்தும் அக்கறை ஒன்றுமே இல்லை என்றே கூறலாம். அவன் வசிக்க போவது சொர்க்கத்தின் உயர்ந்த நிலையத்திலா அல்லது நரகத்தின் தாழ்ந்த ஆழத்திலா என்பதை அவன் அறிய மாட்டான்
0 Comments