கலீஃபா ஹஸரத் உமர்(ரலி) அவர்கள் ஒரு மனிதர் பள்ளிவாயிலில் முன் நின்று யாசிப்பதைக் கண்டு அந்த மனிதருக்கு ஏதும் உதவி செய்து அனுப்பும் படி தன் தோழர் ஒருவரை பணித்தார்கள். அவரும் அம்மனிதருக்கு உணவளித்தார்கள்.
ஆனால் சற்று நேரத்தில் பின்னர் மீண்டும் அம்மனிதர் யாசிப்பதைக் கண்ட கலீஃபா அவர்கள் தனது தோழரிடம், நீர் இந்த யாசகனுக்கு உதவவில்லையா? என வினவ, தோழர் அவர் உணவு கேட்டார். அதை அப்போதே வழங்கிவிட்டேன் என்றார்.
கலீஃபா அவர்களுக்கு கோபம் தாளவில்லை. நீ பசிக்கு உணவு கேட்டார் அதை கொடுத்தாகிவிட்டது. மேலும் நீ என்ன யாசிக்கின்றாய்? நீ உன்மையிலே யாசகனல்ல வியாபாரி. என்று கூறி அவன் கையில் இருந்த பொட்டலத்தை எடுத்துப் பார்த்தார்கள்.
அந்த பொட்டலத்தில் நிறைய ரொட்டித் துண்டுகல் இருக்கக் கண்ட கலீஃபா அவர்கள் அவற்றை பக்கத்திலிருந்த ஒட்டகங்களுக்கு தீனியாக போட்டுவிட்டார்கள். மேலும். இது போன்று மற்றவர்களை ஏமாற்றாதே என எச்சரித்து அனுப்பினார்கள்.
ஏனெனில் அவன் தேவையில்லாமல் யாசகம் கேட்டான். கொடுப்பவர்கள் அவன் யாசகன் என நினைத்து பிச்சையிட்டார்கள். அவன் இவ்வாறு மக்களை ஏமாற்றி தனது தேவைக்கு அதிகமாக பொருளை பெற்றதாலே கலீஃபா அவர்கள் இது போன்று முடிவு செய்தார்கள்.
இஸ்லாத்தில் யாசகம் கேட்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அது உழைத்து உண்பதையெ வலியுறுத்துகிறது. இதனாலே அண்ணல் நபி(ஸல்) அவர்கள் , யாசகம் கேட்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள், ஜனங்களை விட்டும் தேவையற்றவராக இருங்கள். உங்கள் தேவைகளை அல்லாஹ்விடத்தில் மட்டுமே கேளுங்கள் என்று நவின்றார்கள்..

0 Comments