குடிசையை தம் வசிப்பிடம் ஆக்கிய அரசர்!

இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களால் இரண்டாவது உமர் என வர்ணிக்கப்படும் கலீஃபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் ஆட்சியை இன்றும் முஸ்லிம்கள் நினையு கூறுகின்றனர். அன்னார் எளிமையான வாழ்வையே மேற்கொண்டார்கள்.

ஒரு முறை ஒரு வயோதிப பெண் கலீஃபா அவர்களை காண பக்தாத் நகருக்கு வருகிறார். பாக்தாத் தெரு வழியே வானளாவ உயர்ந்திருக்கும் மாடமாளிகைகளைப் பார்த்து வயந்து அவ்வம்மையார் கலீஃபா அவர்களின் மாளிகை எதுவாக இருக்கும் என அறிவதற்காக தெருவின் ஓரத்தில் இருந்த குடிசையில் இருந்த பெண்ணொருத்தியிடம் கலீஃபா வின் மாளிகை எதுவென வினவுகிறார். அப்பெண் மணியோ சிரித்துவிட்டு கலிஃபாவின் மாளிகை இதுதான். என கலீஃபாவின் குடிசையைக் காட்டுகிறாள்!!
வயோதிப அம்மையாரோ என்ன கிண்டலா பண்ணுகிறாய் என அப்பெண்மனியை கடிந்து கொண்டார். அச்சமயம் அங்கு வந்த கலீஃபா அவர்கள் அந்த வயோதிபப் பெண்னை விசாரித்த போது தான் தொலைவிலிருந்து வருவதாகவும் வறுமையில் வாடுவதாகவும் கலீஃபா அவர்களைக் கண்டு உதவி ஏதும் பெற வந்ததாகவும் கூருகிறார்

கலீஃபா அவர்கள் உடன் அப்பெண்ணுக்கு உணவுப்பண்டங்களும், உடை, பணம் முதலியனவும் போதுமானளவு கொடுத்து ஊருக்கு அனுப்பிவைத்தார்கள். குடிசையில் வாழ்ந்த எளிமையான கலீஃபா அவர்களின் கோலத்தைக் கண்ட அவ்வம்மையாரின் வியப்பு நீங்க வெகு நேரம் பிடித்தது

Post a Comment

0 Comments