உஹத் யுத்தக்களத்தில் பெருமானார்(ஸல்) அவர்களின்
கட்டளையை நபித்தோழர்கள் சிலர் தவறுதலாக நிறைவேற்றியதால் போரில் புறமுதுகு காட்டி
பின்வாங்கிய எதிரிப்படையினர் மீண்டும் களத்தில் குதித்து முஸ்லிம் படைவீரர்களை
தாக்கத்துவங்கினர். இதனால் அண்ணல் நபியவர்களின் பல்லொன்று உடைந்ததோடு உடலிலும் காய
மேற்பட்டது.
அவ்வேளை அருகிலுருந்த தோழர்கள் உங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அந்தக் காஃபிர்களை சபியுங்கள் என்றார்கள். அதற்கு அண்ணலவர்கள், தோழர்களே! அல்லாஹ் என்னை சபிப்பதற்காக இவ்வுலகிற்கு அனுப்பவில்லை எனக் கூறியதுடன் இந்த மக்கள் அறியாதவர்கள் இவர்கள் தெரியாத்தனமாக செய்த தீங்குகளை மன்னிப்பாயாக! இவர்களுக்கு நேர்வழி காட்டுவாயாக! என இரு கரமேந்தி இறைவனை பிராத்தித்தார்கள்.
ஏனெனில் எப்போதாவது இவர்கள் திருந்தி இஸ்லாத்தில் இணைவார்கள். அல்லது இவர்களது சந்ததியினராவது இஸ்லாத்தை தழுவுவார்கள். என்பதை அண்ணலவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள். இதனால் எவர் என்ன கொடுமை இழைத்த போதும் எவரையும் ஏந்தல் நபியவர்கள் தனது வாழ் நாளில் சபித்த்தாக சரித்திரமே இல்லை.! இதனாலே இஸ்லாம் எனும் அனையா விளக்கு அகிலமெங்கும் இன்னும் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறது.

0 Comments