ஹதீஸ்கலை
வல்லுநர் இமாம் புஹாரி(ரஹ்) அவர்களை புகாரா நாட்டு ஆளுநர் தனது மகனுக்கு வீடுவந்து
ஹதீஸ் கலை கற்றுக் கொடுக்குமாறு பணித்தார். அதற்கு இமாமவர்கள் கல்வியைத் தேடி
வந்து பெற வேண்டுமே தவிர கல்வியைக் கற்றுக் கொடுப்பவர் மாணவரின் வீடு சென்று
கற்றுக் கொடுப்பது கல்விக்கு இழுக்கை ஏற்படுத்துவதாகும் என்று மறுத்துரைத்தார்கள்.
ஆளுநர் அவர்கள் அப்படியானால் பள்ளியில்
பிரத்தியேகமாக தனது மகனுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும்படி பணித்தார்.
இமாமவர்களோ அதற்கும் இணங்க வில்லை கல்வி
கற்றுக் கொடுப்பதில் மாணவர்கட்கிடையே பாரபட்சம் காட்டுவது ஆசிரியனுக்கு அழகல்ல என
ஆளுநருக்கு எடுத்துரைத்தார்கள்
இதனால் கடும் சினம் கொண்ட ஆளுனர்
இமாமவர்களை நாடு கடத்தும்படி உத்தரவிட்டார். கல்வியின் சிறப்பை அறியாத ஆளுனர்
ஆட்சிசெய்யும் ஊரில் வாழ்வதை விட பரந்து விரிந்த இந்த உலகில் பரதேசியாக வாழ்வது
மேலானது என எண்ணிய இமாமவர்கள் நாட்டை விட்டு உடன் வெளியேறினார்கள்.
அல்-குர்
ஆனுக்கு அடுத்தபடியாக இந்த இமாமவர்கள் தொகுத்த நபி மொழிகள் (ஹதீஸ்) இடம் பெறுகிறது
0 Comments