அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தோழர்களில் ஹசரத் அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஒருவர்.
இவர்கள் பெருமானார் கலந்து கொண்ட அத்தனை போர்களிலும் கலந்து கொண்டார்கள்.
ஒரு முறை உஹத் போரின் போது எதிரிகள் பெருமானார் இருக்கும் இடத்தை கண்டறிந்து
அவர்கள் மீது அம்பு மாரி பொழியத் தொடங்கினர். அவ்வேளை அபூ தல்ஹா(ரலி) அவர்கள் அண்ணலாரின் முன்
நின்று அரண்போல அவர்களை காத்து நின்றார்கள் அல்லாஹ்வின் தூதரே தங்களின்
உயிரைக்காக்க என்னுயிர் இருக்கிறது. என்று கூறிக்கொண்டே எதிரிகளுடன் போராடினார்கள்.
அவ்வேளை அண்ணலாரை நோக்கி வந்த அம்பொன்றை அவர்கள் தம் கையால் தடுத்து நிறுத்த,
அதனால் அவர்கள் கையும் படுகாயமடைந்தது. இப்போரினால் அந்த நபித்தோழரின் மேனியில் எழுபது காயங்கள் ஏற்பட்டன. பெருமானார்
இவர்களைப் பற்றி குறிப்பிடுகையில் நீங்கள் சுவர்க்க வாசியை இவ்வுலகில் காண
விரும்பினால் அபூ தல்ஹாவை கண்டுகொள்ளுங்கள். என்று புகழ்ந்து கூறினார்கள்.
இறைவனிடமிருந்து நீங்கள் அதிகமாக விரும்புவதை செலவு செய்யாதவரை நற்பலனை
பெறமாட்டீர்கள். என்ற திருக்குரானின் வசனம் அண்ணலவர்களுக்கு அருளப்பட்டதை அறிந்த
அபூ தல்ஹா(ரலி) அவர்கள் உடனே தன் வசமிருந்த பைருஹா என்ற தோட்டத்தை அல்லாஹ்வின்
பாதையில் தர்மம் செய்து விட நாடி அண்ணலாரை அனுகினார்கள். அதற்கு நபி அவர்கள்
அந்தத் தோட்டத்தை அவரது உறவினர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும்படி கூறினார்கள்.
இறுதியில் அவர்கள் அவ்வாறே செய்தார்கள்
பகிர்த்தளிக்கப்பட்ட அந்தத் தோட்டத்தில் நீர் ஊற்று ஒன்று இருந்தது. அந்த
நீரூற்றில் அண்ணலவர்கள் அடிக்கடி சென்று நீர் அருந்துவார்கள். இது சுவர்க்கத்து
நீர் ஊற்று போன்றது என அண்ணலவர்கள்
புகழ்த்துரைத்தனர்

0 Comments