நபி(ஸல்) அவர்கள் கூறியதாவது
(மக்காவில் உள்ள) மஸ்ஜிதுல் ஹராம். (மதீனாவில் உள்ள) மஸ்ஜிதுந் நபவி, (பைத்துல் மக்திசில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களுக்குத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக்கும் அதிக நன்மையை எதிர்ப்பார்த்துப் புனிதப் பயனம் மேற்கொள்ளப்படாது
இதை அபூ ஹுரைரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறியதாவது
எனது இந்த மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் தொழுவதானது, ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும், ஆனால், (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர
இதை அபூ ஹுரைரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இது இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது
-சஹீஹுல் புஹாரி பாகம்1; ஹதீஸ் 1190
0 Comments