ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவில்) பதினொன்று ரக்அத்கள் தொழுவார்கள். அதுவே அவர்களின் (இரவுத்) தொழுகையாக இருந்தது. அவர்கள் சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்துவதற்குமுன், உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதக்கூடிய நேரம் அத்தொழுகையில் ஒரு சஜ்தா செய்வார்கள்.ஃபஜ்ர் தொழுகைக்கு முன்னால் இரண்டு ரக்அத்துகள் (சுன்னத்) தொழுதுவிட்டு, (ஃபஜ்ர்) தொழுகைக்காகத் தம்மை அழைக்க தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) தம்மிடம் வரும்வரை வலப்பக்கம் சாய்ந்து படுத்துக்கொண்டிருப்பார்கள்
-புஹாரி பாகம்1; பாடம்3(தஹஜுத்); ஹதீஸ்:1123

0 Comments