முஸல்லாஹ் (தொழுகை விரிப்பு)

மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

Praying in Public Place
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் போது அவர்களுக்கு எதிரில் நான் (படுத்துக்கொண்டு) இருப்பேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும். அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போது சில நேரங்களில் அவர்களது ஆடை என்மீது படும். நபி(ஸல்) அவர்கள் (பேரீச்சங்கீற்றினால் வேயப்பட்ட) தொழுகை விரிப்பில் தொழுவார்கள்.

*புஹாரி பாகம்1; பாடம்: தொழுகை(20); ஹதீஸ்:379

அனஸ் (ரலி) அவர்கள் தமது படுக்கை விரிப்பில் மீது தொழுதார்கள்.

“நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழும் போது, எங்களில் சிலர் தமது ஆடையின் மீதே சிரவனக்கம் (சஜ்தா) செய்வார்கள்” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
  • புஹாரி பாகம்1; பாடம்: தொழுகை(22); ஹதீஸ்:381


ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கப்பலில் நின்ற வண்னம் தொழுதார்கள்.

“நீ கப்பலில் செல்லும் போது) உன் சகாக்களுக்குச் சிரமம் ஏற்படாமலிருக்குமானால், நின்ற நிலையில் கப்பல் செல்லும் திசையிலேயே தொழுதுகொள்; அவர்களுக்குச் சிரமம் ஏற்படுமாயின் உட்கார்ந்து தொழு” என்று ஹசன் அல்பஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்

**இதிலிருந்து தரையில் தான் தொழ வேண்டும் என்ற கட்டாயமில்லை என்பது புலனாகிறது. கப்பலில் தொழுவத்ஹு செல்லும் என்பதையே, தரையில் பாய்மேல் தொழுதாலும் செல்லும் என அறியலாம் (இர்ஷாதுஸ் ஸாரீ)

Post a Comment

0 Comments