சுத்தம் செய்தல்

மலஜலம் கழித்தபின் கற்களால் துடைத்து சுத்தம் செய்தல்

அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறியதாவது

நபி(ஸல்) அவர்கள் இயற்கை கடனை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்றபோது, அவர்களைப் பின் தொடர்ந்து நானும் சென்றேன். அவர்கள் திரும்பிப் பார்க்காமலேயே சென்றார்கள். அவர்கள் அருகில் நான் சென்றபோது "நான் (இயற்கை கடனை முடித்தபின்) சுத்தம் செய்வதற்காக எனக்குச் சில கற்களை(த் தேடி எடுத்து) வாரீர், எலும்பையோ கெட்டிச்சாணத்தையே கொண்டு வந்துவிடாதீர்" என்று சொன்னார்கள்.
நான் (கற்களைப் பொறுக்கியெடுத்து) எனது ஆடையின் ஓரத்தில் போட்டுக் கொண்டுவந்து நபி(ஸல்) அவரகளின் பக்கத்தில் வைத்துவிட்டு. அங்கிருந்து திரும்பிவிட்டேன். நபி(ஸல்) அவர்கள் (இயற்கை கடனை முடித்துவிட்டு) அக்கற்களால் சுத்தம் செய்துகொண்டார்கள்


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  கூறினார்கள்

உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது. பிறவி உறுப்பைத் தமது வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலது கரத்தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். (ஏதேனும் ஒன்றை பருகும் போது) பாத்திரத்திற்குள் மூச்சு விடவும் வேண்டாம்

Post a Comment

0 Comments