அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ‘ஆமீன்’ என்று கூற விண்ணுலகில் வானவர்களும் ‘ஆமீன்’ கூற, இரு சாராரின் ஆமீன் கூறலும் ஒரே நேரத்தில் அமைந்துவிட்டால். அவர் அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்..-இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
-புஹாரி(பாகம்1):: பாடம்:112(தொழுகை அறிவிப்பு) ஹதீஸ்:781
பின்பற்றி தொழுபவர் சப்தமிட்டு ஆமீன் கூறுவது
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்)இமாம் “ஃகைரில் ம்ஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்” என்று ஓதியவுடன் நீங்கள் “ஆமீன்” (அவ்வாறே ஆகட்டும்)” என்று சொல்லுங்கள் ஏனெனில், யார் ‘ஆமீன்’ என்று கூறு(ம் நேரமா)வது வானவர்கள் ‘ ஆமீன் ‘ கூறுகின்ற (நேரத்துடன்) ஒத்தமைந்து விடுகின்றதோ அவர் அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.
(இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.)
-இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
-புஹாரி(பாகம்1):: பாடம்:113(தொழுகை அறிவிப்பு) ஹதீஸ்:782


0 Comments