இறைவனின் வேதனை இறங்கிய இடங்களில் தொழுவது
(கொடுங்கோல் மன்னன் நும்ரூதும் அவனுடைய மக்களும் உயிருடன்) புதையுண்ட (இராக்கிலுல்ல) பாபில் எனும் இடத்தில் தொழுவதை அலீ (ரலி) அவர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது
அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹிஜ்ர் வாசிகளை குறித்து), "இவர்களைத் தீண்டியதை போன்ற அதே வேதனை நம்மையும் தீண்டிவிடுமோ என்று (அஞ்சி) அழுதபடியே தவிர, வேதனை செய்யப்பட்ட இந்த மக்களின் (வசிப்பிடங்கள்) வழியாகச் செல்லாதீர்கள். உங்களால் அழ முடியாவிட்டால் அந்த இடத்திற்கே செல்லாதீர்கள்" என்று (ஹிஜ்ர் பிரதேசத்தைக் கடந்து சென்றபோது எங்களிடம்) கூறினார்கள்.
புஹாரி பாகம் 1 (தொழுகை); பாடம் 53 ; ஹதீஸ் 433
* நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் "தபூக்" நோக்கிச் சென்றபோது ஸமூத் கூட்டத்தார் வசித்துவந்த 'அல் ஹிஜ்ர்' எனும் பகுதியை கடந்து சென்றார்கள். அப்போதுதான் இவ்வாறு கூறினார்கள்*இதையே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது மானவர்களுக்கு கூறினார்கள்


0 Comments