
and prayers
அஸ்ஸலாமு அலைகும் (வரஹ்). அன்பான சகோதரர்களே, சொர்க்கம் செல்லும் எளிதான வழி என்றவுடன் தவறாக நினைக்க வேண்டாம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் கூறிய ஓர் எளிமையான முறையை கவனியுங்கள்.நம்முடைய ஆசைகள் அனைத்தும் செர்க்கம் செல்வதே என்றால் அது மிகையாகாது. ஆனால் நம்முடைய வணக்க வழிபாடுகளை மட்டுமே வைத்து சொர்க்கம் செல்ல முடியுமா என்றால் அது ஒரு பெரிய கேள்விக்குறிதான்.? ஆனால் நபி (ஸல்) அவர்களின் சிபாரிசு இருந்தால். அது எத்தனை எளிதான காரியம் என நினைத்துப் பாருங்கள். நபி (ஸல்) அவர்களின் சிபாரி பெறுவதற்குள்ள எளிமையான வழி என நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தது:
அதான் எனும் (பாங்கு) கூறுவது நாம் அனைவரும் அறிந்ததே. எல்லா மஸ்ஜித்களிலும் பாங்கு கூறப்படுகிறது. நாம் செய்ய வேண்டியது ஒரே விஷயம் தான். அந்த பாங்குக்கு பதில் கூற வேண்டும். கூறி முடித்தபின் பாங்கு துவா ஓத வேண்டும். “யார் ஒருவர் பாங்குக்கு பதில் கூறி பாங்கு துவா ஓதுவாரே அவருக்கு என்னுடைய ஸ்ஃபாத் வாஜிப் ஆகிவிட்ட்து” என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
பாங்குக்கு பதில் கூறுவது என்றால் என்ன?
பாங்கு கூறும் போது அதை அப்படியே திரும்ப கூற வேண்டும்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்றால் நீங்களும் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என கூற வேண்டும்.
*ஹையாலஸ் ஸலாஹ்
*ஹையால்ல் ஃபலா
என கூறும் போது மட்டும். விரும்பினால் அதே வார்த்தைகளையே திரும்ப கூறலாம். இல்லையென்றால். “லா ஹொல வலா குவ்வத்த இல்லா பில்லா” எனும் மூன்றாம் கலிமாவில் வரும் வரியைகூறலாம்.
For Dua Please Visit the Below Link.

0 Comments