"தன்யீமி" - லிருந்து உம்ரா செய்வது




·        ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான்அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனைவரும் உம்ரா செய்துவிட்டீர்கள்; நான் மட்டும் உம்ரா செய்யவில்லைஎனக் கூறினேன்.
அப்போது நபி(ஸல்) அவர்கள்அப்துர் ரஹ்மானே! உம்முடைய சகோதரியை அழைத்துச் சென்று , தன்யீமிலிருந்து அவரை உம்ரா செய்யவைத்து வாரும்என்றார்கள்.
அப்துர் ரஹ்மான் என்னை ஒட்டகத்தின் சேண்(த்துடன் இணைந்த) இருக்கையின் பின் பகுதியில் அமர்த்தினார், நான் உம்ரா செய்தேன்.
புஹாரி : 1518



·        ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், என் சகோதரர் அப்துர் ரஹ்மானை என்னுடன் அனுப்பி ‘தன்யீம்’ எனுமிடத்திலிருந்து இஹ்ராம் கட்டி, உம்ரா செய்யுமாறு கட்டளையிட்டார்கள். அவர்கள் ஒட்டகச் சேண்த்தி(ன் பிற்பகுதியி)ல் என்னை அமரவைத்தார்.
“ஹஜ்ஜுக்காக ஒட்டகச் சேணங்களைக் கட்டுங்கள். ஏனெனில், அது (ஹஜ்) இரண்டு அறப்போர்களில் ஒன்றாகும்” என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 1516

 

Post a Comment

0 Comments