ஆயிஷா (ரலி)அவர்கள் கூறியதாவது:
என்னிடத்தில் ஒரு பெண்மணி அமர்ந்திருக்கும்போது நபி (ஸல்) அவர்க்ள்
(வீட்டுக்கு) வந்தார்கள். “யார் இவர்?” என்று கேட்டார்கள். நான் “இவர் இன்னவர்?” என்று கூறிவிட்டு. அவரது
தொழுகையைப் பற்றி (சிலாகித்து)க் கூறினேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “போதும் நிறுத்து!
(வழிபாடுகளில்) உங்களால் முடிந்த்வற்றைச் செய்துவாருங்கள். அல்லாஹ்வின் மீதானையாக
! நீங்கள் சலிப்படையாத வரை அல்லாஹ் சலிப்படையமாட்டான். மேலும், மார்க்கத்தில்
நல்லறங்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானவை, ஒருவர் நிரந்தரமாகச் செய்யும்
நற்செயல்கள்தான்” என்று கூறினார்கள்.
-புஹாரி 43

0 Comments