இறைநம்பிக்கையின் அம்சங்கள்:



மகத்துவமிக்க இரவில் (லைலத்துல் கத்ர்) நின்று வழிபடுவது இறைநம்பிக்கையின் ஓர் அம்சமாகும்..

            அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் இறைநம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் ககத்துவமிக்க (லைலத்துல் கத்ர்) இரவில் நின்று வழிபடுகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.
-அபூ ஹுரைரா (ரலி)
-புஹாரி

அறப்போர் புரிவதும் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.

    நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனது வழியில் (அறப்போர் புரிய) புறப்பட்டுச் சென்றவருக்கு அல்லாஹ் விரைவாக நற்பலன் வழங்குவான். அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் கொண்ட நம்பிக்கையாலேயே அவர் புறப்பட்டிருக்க வேண்டும். அவர் அடையும் நன்மையுடன். அல்லது போர்ச்செல்வங்களுடன் அவரைத் திரும்பச் செய்வத்ற்கோ, அல்லது அவரச் சொர்க்கத்தில் அனுமத்ப்பத்ற்கோ (அல்லாஹ் பொறுபேற்றுக் கொள்கிறான்).
     என் சமுதாயத்த்ற்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் எனும் அச்சம் மட்டும் எனக்கு இல்லாவிட்டால், (நான்) அனுப்பும் எந்தப் படைப்பிரிவுக்குப் பின்னரும் (ஊரில்) நான் அமர்ந்திருக்கமாட்டேன். நிச்சயமாக நான் இறைவழியில் (போரிட்டுக்) கொல்லப்பட்டு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு, மீண்டும் (இறைவழியில்) கொல்லப்படடு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு, மீண்டும் (அவ்வழியில்) கொல்லப்பட (இவ்வாறே மீண்டும்
மீண்டும் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்ய) வேண்டும்  என்றே விரும்புகிறேன்.
     --இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ரமளான் மாத்த்தில் கூடுதலாக நின்று வழிபடுவதும் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.

            அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் இறைநம்பிக்கையோடும் நன்மையைஎதிர்பார்த்தும் ரமளான் மாத்த்தில் நின்று வழிபடுகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.

-இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
-நூல் : புகாரி 37

நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் இறைநம்பிக்கையோடும் நன்மையைஎதிர்பார்த்தும் ரமளான் மாத்த்தில் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.
-இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
-நூல் : புகாரி 37


Post a Comment

0 Comments