"►ஒரு மனிதன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்துகொள்பவனாக இருந்தால், கடமைகளைக் கைவிடமாட்டான்; தடைகளை மீறமாட்டான். இந்த ஒரு தன்மை வந்துவிட்டாலே இறை நம்பிக்கையின் பெரும்பாலான கிளைகள் வந்துவிடும். ►அடுத்து முகமன் (சலாம்) கூறல், ஒருவருடைய உயர் பண்பை, குறிப்பாக அடக்கத்தையும் பணிவையும் காட்டும். அறிந்தவர், அறியாதவர் என்ற பாகுபாடின்றி சலாம் கூறும்போது அகந்தை அகன்றுவிடும். இதன் மூலம், நல்லினக்கம், நல்லுறவு மலரும். ►வறுமையிலும் வழங்குதல் சாதாரணமான குணமன்று. வறுமையிலேயே வழங்கும் ஒருவர், வசதியாக இருந்தால் அதிகம் வழ்ங்குவார். இதுவெல்லாம், மனிதன் தன்னைஅணியச் செய்யும் அடையாளங்கள் ஆகும் (ஃபத்ஹுல் பாரி)"
ஹதீஸ்:
►அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:மனசாட்சியுடன் நேர்மையோடு நடந்துகொள்ளல், உலகில் (எந்த இடத்திலும்) சலாமைப் பரப்புதல், வறுமையிலும் வழங்கி வாழ்தல் ஆகிய முப்பண்புகளை யார் (தம்மில்) ஒன்று சேர்த்துக்கொண்டாரோ, அவர் இறைநம்பிக்கையை ஒன்றுசேர்த்துக் கொண்டுவிட்டார்.
►அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம். "இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்த்து எது?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பசித்தோருக்கு) நீங்கள் உணவளிப்பதும், அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் "சலாம்" சொல்வதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள்
Trouble Viewing Tamil Font Click Here to Download the PDF Version for this HADITH

0 Comments