“நாணம்
என்பது தீமைகளைச் செய்யும் போது உள்ளத்தில் ஏற்படும் இறுக்கம் அல்லது கூச்சத்தைக்
குறிக்கும். இது மனித
இயல்பாகும். மிருகங்களைப் போன்று, விரும்புவதையெல்லாம் செய்துவிடாமல் மனிதனை
கட்டிப்போடுவது இந்த குணம்தான். உறுதிவாய்ந்த இறைநம்பிக்கை, பாவங்களிலிருந்து
தடுப்பதை போன்றே, நாணமும் தடுக்கிறது. எனவே, நாணமும் இறை நம்பிக்கையின் ஓர்
அம்சமாகிறது. நாணம் அசிங்கத்தை அஞ்ச்ச் செய்கிறது; நாணம், கெட்ட பெயர் வந்துவிடக்
கூடாது என எச்சரிக்கிறது. எனவே நாணம் முழுக்க முழுக்க ந்ன்மைதான்’ தீமை அல்ல.
(ஃபத்ஹுல் பாரி)”
ஹதீஸ்:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரைக்
கடந்து சென்றர்கள். வெட்கப்படுவது தொடர்பாக(க் கண்டித்து) தம் சகோதர்ருக்கு அவர்
அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவரை(க்
கண்டிக்காதீர்கள்;) விட்டுவிடுங்கள். ஏனெனில், நாணமும் இறைநம்பிக்கையின் ஓர்
அம்சமே” என்று கூறினார்கள்
-அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
-புஹாரி
►Trouble Viewing
Tamil Fonts Click Here to
Download the PDF Version
For this HADITH

0 Comments