தீவிரவாதமும் அதன் அர்த்தமும் (.. தீவிரவாதம் என்றல் முஸ்லீம் என்று நினைக்கும் அப்பாவி சொந்தகளுக்கு ஒரு விளக்கமே )

இந்த பதிவை முழுமையாக படித்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்.. 

அனைவரிடமும் ஒரு விஷயத்தை தெளிவு படுத்தவும், சிந்திப்பதற்கான ஒரு பதிவு .. 
தீவிரவாதம் என்றால்  முஸ்லீம் என்று நினைக்கும் அப்பாவி சொந்தகளுக்கு ஒரு விளக்கமே .

தீவிரவாதமும் உலக அளவில் நடத்தப்படும் பொய்யான
குற்றச்சாட்டும் .

தீவிரவாதம் என்று சொன்னதும் எல்லாருக்கும் முதலில்
தோன்றும் உருவம் தலை மறைத்து தாடிவைத்த ஒரு நபர் அவருக்கு முஸ்லீம் என்ற பொருள் கொடுத்து வைத்து இருக்கிறது இன்றைய வளர்ந்த நாடுகள் அமெரிக்க இஸ்ரயேல் போன்ற நாடுகள்...

இஸ்லாம் தீவிர வாதத்தை ஆதரிக்குறதா ? இல்லையா ? என்பதை காண்பதற்கு முன் இஸ்லாம் என்ன சொல்லுகிறது எதனை போதிக்கிறது தெரிந்து கொண்டு பிறகு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.
இஸ்லாம் போதிப்பது ......
  • மார்க்க நல்லிணக்கம்
  • மத நல்லிணக்கம்
  • மனித நல்லிணக்கம்

1.மார்க்க நல்லிணக்கம்இஸ்லாத்தின் கொள்கை ஒரே இறைவன் என்பதும் மனிதனுக்கான வாழ்க்கை வழி முறை பற்றி
யும் உறவுகளின் பேணுதலின் பற்றியும் மனித சுயஒழுக்கம், வாழ்விற்கான நெறி முறைகளை பற்றியும் இன்ன பிற நல் விஷயங்களை மனிதர்களுக்கு போதிப்பதே ..
இதில் எங்கும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும்
தீவிரவாதம் ஆதரித்தது இல்லை .

2.மத நல்லிணக்கம்இஸ்லாம் தோன்றி 1400 வருடங்களுக்கு மேலாக ஆகிவிட்டது . இஸ்லாம் தோன்றிய பூர்த்தி அடைத்த காலம் முதல் இன்று வரை மத நல்லிலக்கணத்தை தெளிவு படுத்துகிறது ..
(Lakum
deenukum waliya deen ) لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
For you
is your religion, and for me is my religion.”

உங்கள் மதம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு..
இதை 1400 வருடங்களுக்கு முன்பே நபி (ஸல்) போதித்தார் ..இஸ்லாமிய ஆட்சி நாடு முழுவதும் இருந்த போதும் நாட்டை ஆண்டர்களே தவிர இஸ்லாமியர்கள் நாட்டு மக்களிடம் இஸ்லாத்தை திணிக்கவில்லை .
3.மனித நல்லிணக்கம்இஸ்லாம் போதிப்பது உறவுகளையும் அண்டை வீட்டாரையும்
நேசிக்கவே சொல்லி உளள்து .. அன்பை நேசத்தையும் மட்டுமே போதிக்கிறது .. தங்கள்

" அண்டை வீட்டார் பசித்திருக்க நீங்கள் மட்டும் உண்ணாதீர்கள் அவர்களும்
உணவளித்து நீங்கள் உண்ணுகள்" என்பதே இஸ்லாம் காட்டிய வழிமுறை .
மேலே சொல்லியது அனைத்தும் சிறு குறிப்பு தங்கள்
தங்கள் புரிதலுக்காக ..
தீவிரவாதம்
a person who uses terrorism in the pursuit of political aims..இது தீவிரவத்தின் அர்த்தம் என்று கூகிளில் காண்பது .
தீவிரவாதம் என்னுடை பொருள் ஒழுக்கம் அற்ற கொள்கை
அற்ற மனிதாபிமான இல்லாத அபகரிப்பு  குணம் கொண்ட அரக்கர்கள்
தற்போது நடக்கும் நடந்து கொண்டி இருக்கும் போர்களில்
அதிகமா உயிர் இழந்தோர் பொருள் உடமை இழந்து நிற்கும் ஒரு சமூகம் என்றல் அது முஸ்லீம் சமுதாயம் ஆனால் அதை மறைத்து அவர்கள் மீது தீவிரவாதி என்ற முத்திரையை  பதித்து மக்களிடம் காட்டவே செய்கிறது உடகங்களும் வளர்ந்த நாடுகளும்.

நான் மேலே குறிப்பிட்டது போல இஸ்லாம் தோன்றி 1400 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது ஆனால் இந்த தீவிரவாதம் தோன்றி எத்தனை ஆண்டுகள் ஆகிறது யோசித்து பாருங்கள். .. சிலரது கூற்று இஸ்லாம் ஜிஹாத் ஆதரிக்கிறது அப்போ அது என்ன என்று ஜிஹாத் என்பது இறைவழியில் போராடுவது அதை பற்றி முழுவதும் தெரிந்து கொண்டால் நீக்கல் தீவிரத்தையும் ஜிஹாத்தையும் இணைத்து கொண்டு கொழப்பிக்கொள்ள மாட்டிர்கள் .

இஸ்லாம் பெயரை கொண்டு அதனை வைத்து அரசியல் செய்து
நாட்டை கைப்பற்ற நினைக்கும் வளர்த்த நாடுகளின் சூழ்ச்சி தவிர இஸ்லாமிய தீவிரவாதி என்று ஒரு சமூகமே இல்லை. ஆனால் ஒன்று உங்கள் வீட்டை வேறு ஒருவன் வந்து உரிமை கொண்டாடினாலோ அல்லது உங்களது பெண்களை மனபங்கம் படுத்த நினைத்தாள் நீக்கல் கையை
கட்டி வேடிக்கை பார்ப்பீர்களா? அல்லது அவர்களை அழிக்க நினைப்பீர்களா? இதை போன்று தான் ஈராக்,ஈரான்,பலஸ்தீன், சிரியா இங்க நடப்பது வளர்த்த நாடுகள் அமெரிக்க இஸ்ரைல் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த நினைத்து அங்கு இருக்கும் அப்பாவி மக்களை கொலை செய்தார்களே இறந்த மக்கள் யார் ? முஸ்லிம்கள் அதை எதிர்த்து போரிட்டவர்களை தீவிரவாதி என்று முத்திரை குத்தியது யாரு என்று உங்களுக்கு தெரியும் ..


இஸ்லாம் போதிப்பது அமைதி நேசம் இணக்கம் இரக்கம் .
இஸ்லாம் தீவிர வாதத்தை ஆதரிப்பதும் இல்லை
வளர்க்கவும் இல்லை .
அப்படி ஆதரித்து இருந்தால் எங்களது சொந்தங்களை
நாங்கள் இழந்திருக்க மாட்டோம் ஏனென்றால் முஸ்லீம் பயப்படுவதும் அடி பணிவதும் அல்லாஹ்விற்கு
மட்டுமே ..

உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

Post a Comment

0 Comments