மன்னரை விழிக்கச் செய்த வழிப்போக்கன் | Islamic Motivational Stories

இப்றாஹிம் இப்னு அத்ஹம் (ரஹ்) அவர்கள் பல்க் நாட்டை ஆட்சி செய்த காலமது. ஆடம்பரமான அவரது மாளிகைக்குள்ளே திடீரெனெ ஒரு வழிப்போக்கன் நுழைகின்றான். இதனைக் கண்ட காவலாளர்கள் அவனை தடுத்து நிறுத்தி அனுமதியில்லாமல் மாளிகைக்குள் நுழைந்த காரணத்தை வினவுகின்றனர்.
Kremlin Palace Moscow Russia

வழிப்போக்கனோ அலட்டிக் கொள்ளாமல் சத்திரத்திற்கு நுழைய எவரிடமும் அனுமதி தேவையில்லையே? என சாவதானமாக கூறுகிறான்
காவலர்கள் வழிப்போக்கனை பிடித்து அரசன் முன் நிறுத்தி நடந்த விடயத்தைக் கூறுகின்றனர். அரசனோ கோபத்தோடு எனது அழகான பிரமாண்டமான மாளிகையைப் பார்த்து சத்திரமென்று இழிவாக நினைத்தாயா உன்னை என்ன செய்கிறேன் பார் என்று உறுமினார்.
வழிபோக்கனோ அமைதியாக அரசரே! உங்களுக்கு முன்னால் இந்த மாளிகையில் வாழ்ந்தவர் யார்? என வினவ அரசர் என் தந்தை, தந்தைக்கு முன் பாட்டன், பாட்டனுக்கு முன் முப்பாட்டன், என்று பதில் சொன்னார்.
அதற்கு வழிப்போக்கன் அரசரே! பாருங்கள், இங்கு எவருமே நிரந்தரமாக வாழவில்லை. ஒருவர் வர ஒருவர் செல்ல இருப்பது சத்திரமில்லாமல் அரண்மனையாக எப்படி இருக்க முடியும். அதனால் தான் இதனை சத்திரம் என்றேன். இது தண்டனைக்குரிய குற்றமல்லவே என்றான்
மன்னனின் அக்க்கண்கள் திறந்து கொண்டன. வழிப்போக்கனை விடுதலை செய்து சிந்தனையில் ஆழ்ந்தார்.

பின்னர் அவர் அரசு துறந்து இறைதியானத்தில் தன் வாழ் நாளை கழிக்கலானார்.

Post a Comment

0 Comments