கண்ணீரை வரவழைத்த பதில்

இஸ்லாத்தின் நல்லாட்சியாளருள் தலை சிறந்தவரான கலீஃபா ஹஸரத் உமர்(ரலி) அவர்கள் தனது குடும்பச் செலவுக்காக சிறு தொகைப்பணத்தை மாதா மாதம் பொது நிதியிலிருந்து பெற்று வந்தார்கள்.

ஒரு முறை கலீஃபா அவர்களுக்கு அவசரத்தேவைக்காக நூறு திரஹம்கள் பணம் தேவைப்படுகிறது. எனவே அரச நிதிக்காப்பாளருக்கு பின் வருமாறு கடிதமெழுதினார்கள்.
அரச நிதிக்காப்பாளருக்கு, “எனது சொந்த தேவைக்காக நூறு திரஹம் பணம் தேவைப்படுகிறது. எனது அடுத்த மாதச்சம்பளத்தில்  அதைக்கழித்துக் கொள்ளுங்கள் முற் பணமாக தயவு செய்து குறிப்பிட்ட தொகையை அனுப்பி வையுங்கள்”
நிதிக்காப்பாளரிடமிருந்து கலீஃபா அவர்களுக்கு பதில் வந்தது.,
அன்புள்ள கலீஃபா அவர்களுக்கு, தங்களின் கடிதம் கிடைத்தது, தாங்கள் அடுத்த மாதம் வரை உயிரோடிருப்பதாக எனக்கு உறுதியளிப்பின் தாங்கள் குறிப்பிட்ட தொகையை உடனடியாக அனுப்பி வைக்கிறேன்.
கலீஃபா அவர்களின் கண்கள் குளமாகின, மரணம் எந்த நிமிடத்தில் வரும் என யாரால் தான் கூறமுடியும்? அந்த அல்லாஹ்(சுபஹானவத்தாலா)வை தவிர.

நிதிக்காப்பாளரிடம் தன் தவறுக்காக மன்னிப்பை வேண்டி நின்றார்கள் அந்த மாமன்னர் கலீஃபா உமர் (ரலி) அவர்கள்.

Post a Comment

0 Comments