அப்துல்லாஹ் பின் மஸூத் (ரலி) அவர்கள் கூறியதாவது
ஒரு முறை நபி (ஸல் ) அவர்கள் லுஹர் தொழுகையை ஐந்து ரக்காத் களாக தொழ வைத்து விட்டார்கள். தொழுகை முடிந்து திரும்பியமர்ந்த நபி அவர்களை நோக்கி மக்கள், "தொழுகையில் அதன் ரக்காத் கூடு்தல்லாக்கபட்டு விட்டதா?" என்று கேட்டார்கள். நபி (ஸல் ) அவர்கள், "ஏன் இவ்வாறு (வினவுகிறீர்கள்)?" என்று கேட்டார்கள்.
மக்கள், " நீங்கள் ஐந்து ரக்காத் தொழு(வித்)தீர்கள் (அதனால்தான் வினவிநோம்.)" என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள் (தொழுகை இருப்பில் அமர்வதை போன்று) தம் கால்களை மடக்கி (கிப்லாவை நோக்கி திரும்பி மறதிக்காக) இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள்.
புஹாரி பாகம் 1, பாடம்:தொழுகை; ஹதீஸ்: 404
0 Comments