தொழுகையில் கவனம் தேவை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் முன்னோக்கும் திசை இதுதான் (என்பதால் எனக்குப் பின்னால் தொழும் உங்களை நான் கவனிக்கவில்லை) என்று  நினைத்துக்கொண்டீர்களா?
 அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களது குனிதலும் (ருகூவும்) உங்களது பணிவும் எனக்குத் தெரியாமல் போவதில்லை. என் முதுகுக்கு அப்பாலும் நிச்சயமாக உங்களை நான் காண்கிறேன்.
இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்கள் கூறினார்கள்:
ருகூவையும் சஜ்தாவையும் நிறைவாக செய்யுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! ‘எனக்கு பின்புறமாக’ அல்லது ‘என் முதுகுக்குப் பின்புறமாக’ நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யும் போதும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போதும் நிச்சயமாக உங்களை நான் பார்க்கிறேன்.
இதை அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
-புஹாரி பாகம்1
-பாடம்:தொழுகை அறிவிப்பு;
-ஹதீஸ்: 741 & 742


Post a Comment

0 Comments