ஸகாத் - அபூபக்ர் (ரலி) அவர்களின் போர் பிரகடனம்

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:


       (நபி(ஸல்) அவர்கள் இறந்த பின் சிலர் ஸகாத் வழங்க மறுத்த போது) அபூபக்ர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் மீதானையாக ! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் வழங்கிவந்த (ஸகாத்களில்) ஓர் ஆட்டுக் குட்டியை என்னிடம் தர மறுத்தாலும் அதற்காக அவர்களுடன் நான் போர் புரிவேன்" என்று கூறினார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள். (ஸகாத் கொடுக்க மறுத்தவர்கள்மீது) போர் தொடுக்கும் (முடிவை எடுக்கும்) படி அபூபக்ர்(ரலி) அவர்களின் இதயத்தை அல்லாஹ் விரிவாக்கிவிட்டான் என்பதைத் தவிர வேறெதுவும் நான் கருதவில்லை.  அதுதான் சரியானது என்பதை நான் அறிந்து கொண்டேன்" என்று கூறினார்கள்

-புஹாரி பாகம்1; பாடம்: ஸகாத்; ஹதீஸ் :1456, 1457


இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது

Post a Comment

0 Comments