பள்ளிவாசலில் ஜமாத் தொழுகை

பள்ளிவாசலில் ஜமாத்துடன் தொழுவதன் சிறப்புகளை இந்த ஹதீஸ்கள் தெளிவாக விளக்குகின்றன. அல்லாஹ் நம் அனைவரின் தொழுகைகளை அங்கீகரித்துக்கொள்வானாக ஆமீன்.!!!
  • நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது வீட்டில் தொழுவதை விடவும்,  தமது கடைத்தெருவில் தொழுவதை விடவும் ஜமாத்துடன் தொழுவது மதிப்பில் இருபத்தி  ஐந்து (மடங்குகள் தொழுகைகள்) கூடுதலாகும்
  • . உங்களில் ஒருவர் செம்மையாக உளூச்செய்து தொழுகின்ற நோக்கத்துடன் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளி வாசலுக்குள் வரும் வரை எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஓர் அந்தஸ்த்தை அல்லாஹ் உயர்த்துகின்றான்; ஒரு பாவத்தை நீக்குகின்றான்
  • . கூட்டுத்தொழுகையை எதிர்பார்த்து பள்ளிவாசலில் இருப்பவர் அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். மேலும் அவர் (வெளியேறிவிடாமல்) எந்த இடத்தில் தொழுகின்றாரோ அந்த இடத்திலேயே இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கின்றார்கள்
 அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புஹாரி 477

If Tamil Fonts Not Supported Click Here to Download the Pdf Version


Post a Comment

0 Comments