கடன் கொடுத்தவனின் தகாத நோக்கம் !?!

பெருமானார் (ஸல்) அவர்கள் ஏழை எளியவர்கட்கு உதவுவதில் எப்போதும் முன்னிலையில் நின்றார்கள். அன்னார் இரவு படுக்கைக்குச் செல்லும் போது ஒரு திர்கம் கையிலிருந்தாலும் அதை தர்மம் செய்யும் வரை தூங்கவே மாட்டார்கள். தன்னிடம் இல்லாவிட்டாலும் பிறரிடம் கடனாக வாங்கியாவது இல்லாதவருக்கு உதவுவார்கள். அல்லது உதவி செய்யும் மற்றோருவரை அனுக சொல்லுவார்கள்.

ஒரு முறை பெருமானார்(ஸல்) அவர்கள் ஒரு யூதனிடம் கடன் வாங்கியிருந்தார்கள். கடன் தொகை திருப்பிக் கொடுக்கும் தவணை முடியுமுன்னரே யூதன், பெருமானாரை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் கடனைத் திருப்பிக் கேட்டு காரசாரமாகப் பேச ஆரம்பித்தான். அமைதியின் பிம்பமான அண்ணலார் எதுவும் பேசவில்லை. பக்கத்திலிருந்த தோழர் உமர்(ரலி) அவர்களுக்கு யூதனின் வார்த்தை கோபத்தை ஊட்டியது. அவனைத் தாக்க முற்பட்டார்கள்.


உடனே பெருமானார் (ஸல்) அவர்கள், உமர்(ரலி) அவர்களை நோக்கி “அவரை விட்டுவிடுங்கள், அவருக்கு இதில் உரிமை உண்டு “ எனக்கூறினார்கள். இதனை கவனித்த அந்த யூதன். பெருமானாரின் இனிய பண்பை உணர்ந்து. தவனை முடிந்து வருவதாக கூறி விடை பெற்றான்.

Post a Comment

0 Comments