வயது வந்த ஆண், பெண் அனைவரின் மீதும் நோன்பு நோற்பது கட்டாய கடமையாகும்.
சுபுஹூ
சாதிக் அதிகாலையிலிருந்து சூரியன் மறையும் வரை சாப்பிடுவது, குடிப்பது,
உடலிறவு கொள்வது ஆகியவைகளை விட்டும் விலகி இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நோன்பிற்கும் நிய்யத் செய்வது நிபந்தனையாகும். அதாவது முழுமனதுடன் நோன்பு வைக்கிறேன் என்ற நாட்டம் இருக்க வேண்டும்
நோன்பு விஷயத்தில் சலுகை அளிக்கப்பட்டவர்கள்
நோயாளி,
பயணி, மாதவிலக்கு பெண்கள், நோன்பு நோற்றால் தனக்கோ தன் குழந்தையின்
உயிருக்கோ பாதிப்பு ஏற்பட்டுவிடும் என அஞ்சுகின்ற கற்பமுற்ற பெண்கள்,
குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இவர்கள் ஒவ்வொருவரும் விடுபட்ட
நோன்புகளை ரமலான் அல்லாத மற்ற நாட்களில் கட்டாயமாக நிறைவேற்றி ஆகவேண்டும்.
நோன்பு
நோற்றால் பசி, தாகம் காரணமாக உயிர் இழக்க நேரிடும் என்ற நிலையில் உள்ள
நோயாளிகள், நோன்பு நோற்க முடியாத பலவீனமான முதியவர்கள். இயலாதவர்கள்
மட்டும் ஒரு நோன்பிற்கு பகரமாக ஒரு ஏழைக்கு வயிறார ஒரு நாள் உண்வளிக்க
வேண்டும்.
நோன்பின் சுன்னத்துகள்
அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுதல்.
ஸஹர் உணவை அதன் நேரத்திற்குள் தாமதமாக சாப்பிடுதல்.
சூரியன் மறைந்த உடன் தாமதமின்றி சீக்கிரமாக இஃப்தார் செய்தல். (நோன்பு திறப்பது)
0 Comments